உகண்டாவில் 200 கைதிகள் நிர்வாணமாகத் தப்பியோட்டம்

உகண்டாவில் ஆயுதங்களைத் திருடி, உடைகளைக் களைந்து நிர்வாணமாக தப்பிச் சென்ற 200 க்கும் அதிகமான கைதிகளை படையினர் தேடி வருகின்றனர்.

இதன்போது ஏற்பட்ட மோதல்களின்போது இரு கைதிகள் மற்றும் ஒரு படை வீரர் கொல்லப்பட்டதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

மொரோடோ நகரில் கடந்த புதன்கிழமை இராணுவச் சோதனைச் சாவடி ஒன்றுக்கு அருகில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்தே இந்த கைதிகள் தப்பிச்சென்றனர்.

பிராந்தியத்தில் கால்நடைத் திருட்டுடன் சம்பந்தப்பட்ட கடும் குற்றவாளிகளே இந்தச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமது மஞ்சள் நிற கைதிகள் அங்கியினால் அடையாளம் காணப்படுவதை தவிர்ப்பதற்கு அந்த ஆடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக காட்டுப் பகுதி ஒன்றை நோக்கி இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களிடம் 15 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதாக எச்சரித்திருக்கும் இராணுவம் ஆடைகளை பெறுவதற்கு வீடுகளுக்கு ஊடுருவலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கால்நடை திருட்டு மற்றும் துப்பாக்கி வன்முறைகளால் பதற்றம் நிறைந்த பிராந்தியமான கரமொஜாவின் மிகப்பெரிய நகராக மொரோடோ உள்ளது.

Fri, 09/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை