கொவிட்–19: அமெரிக்காவில் 200,000ஐ தொட்ட உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200,000ஐ தாண்டி இருப்பதாக ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகில் வேறு எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் 6.8 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையி்ல் வடக்கு டகோடா மற்றும் உத்தாஹ் உட்பட பல மாநிலங்களில் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையிலேயே உயிரிழப்பு எண்ணிக்கை 200,000ஐ தொட்டுள்ளது.

இந்த புதிய உயிரிழப்பு எண்ணிக்கை பயங்கர விடயம் என்று குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த வைரஸை சீனா மட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று சாடினார்.

எனினும் வைரஸ் தொற்றுக்கு எதிரான தமது செயற்பாடுகளை பாதுகாத்து பேசிய டிரம்ப், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால் இரண்டு, இரண்டரை அல்லது மூன்று மில்லியன் பேர் இறந்திருக்கக் கூடும் என்றார்.

எனினும் டிரம்பின் நிர்வாகம் நோய்ப்பரவலைக் கையாளத் தவறியதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை