நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 16 பேர் பலி

தென்மேற்கு சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் சிக்கிய பதினாறு சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதோடு மேலும் ஒருவர் உயிரிக்கு ஆபத்தான நிலையில் சிக்கிச்சை பெற்று வருகிறார்.

பொருட்களை எடுத்துச் செல்லும் பட்டை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீயினால் ஆபத்தான அளவில் காபனோரொக்சைட் வெளியானதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று சீன அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிவது தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கியுஜியாங் மாவட்ட அரசு, சமூக ஊடகமான வெய்போவில் தெரிவித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற சொங்சோ நிலக்கரிச் சுரங்கம் அரச எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். எனினும் மோசமான பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாடுகள் காரணமாக சீனாவில் சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

தென்மேற்கு குயின்சு மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிலக்கரி மற்றும் எரிவாயு சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை