ஆப்கான் குண்டு வெடிப்பில் 14 பொதுமக்கள் உயிரிழப்பு

மத்திய ஆப்கானிஸ்தானில் நேற்று இடம்பெற்ற வீதியோர குண்டு வெடிப்பு ஒன்றில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 14 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

டாய்குடி மாகாணத்தில் வாகனம் ஒன்று கண்ணிவெடியில் சிக்கி ஏழு பெண்கள், ஐந்து சிறுவர்கள் மற்றும் இரு ஆண்கள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் தாரிக் ஆரியன் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் இரு சிறுவர்கள் காயம் அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கட்டார் தலைநகர் தோஹாவில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த போதிலும் ஆயுத மோதல்கள் மற்றும் குண்டு வெடிப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அரசாங்கம் இடையிலான பேச்சுவார்த்தை செப்டெம்பர் 12 அன்று ஆரம்பமானது. ஆப்கானிஸ்தானில் நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பாதுகாப்பான மற்றும் நீண்டகால யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை