ஸ்தான்பூல் தாக்குதல்தாரிக்கு 1,000 ஆண்டுக்கு மேல் சிறை

ஸ்தான்பூல் இரவு விடுத்தி ஒன்றில் 39 பேரைக் கொன்ற துப்பாக்கிதாரிக்கு துருக்கி நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

உஸ்பகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துல்காதிர் மசரிபோ என்பவருக்கு 40 ஆயுள் தண்டனைக்கு இணையான தண்டனை கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் ரெயினா இரவு விடுதியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் தொடர்பில் மூன்று ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணைக்கு பின்னரே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசுக் குழு பொறுப்பேற்றிருந்தது. அரசியலமைப்பை மீறியது மற்றும் திட்டமிட்ட கொலைகளில் ஈடுபட்டதற்காக மசரிபோவுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாக அனடொலு செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. அவர் பிணையில் விடுதலையாவதும் மறுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்தத் தாக்குதலில் காயமடைந்த 79 பேரை கொலை செய்ய முயன்றதற்காக அவருக்கு மேலும் 1,368 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு உதவியதற்காக இல்யாஸ் மமசரிபோவ் என்பவருக்கு 1,400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை