சூடான் வெள்ளத்தில் 100 பேர் வரை பலி

சூடானில் அண்மைய வாரங்களில் இடம்பெற்று வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 100 பேர் வரை உயிரிழந்திருப்பதோடு நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள நிலையால் பல பிராந்தியங்களிலும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அண்மைய வெள்ளங்களில் குறைந்தது 46 பேர் காயமடைந்திருப்பதோடு, பெரும் அளவான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.

வடக்கு கோர்டோபான் பிராந்தியத்தில் வெள்ளத்தால் கடந்த திங்கட்கிழமை 11 பேர் உயிரிழந்து, 375 வீடுகள் தரைமட்டமாகி இருப்பதாகவும் 16 அரச கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகவும் சிவில் பாதுகாப்பு பொலிஸ் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு நூற்றாண்டில் காணாத அளவுக்கு நைல் நதியின் நீர்மட்டம் உயர்ந்திருந்த போதும் சில இடங்களில் தற்போது அது ஸ்திரமான நிலைக்கு திரும்ப ஆரம்பித்திருப்பதாக சூடான் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தலைநகர் கார்டூம் மற்றும் சில நைல் நதி மாநிலங்களில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை