இது படமல்ல; உண்மை பாசத்தின் வெளிப்பாடு

முகநூலில் மனோ கணேசன் எம்.பி பாராட்டு

பிரதமர் பதவியேற்பு நிகழ்வில் கோட்டாபய ராஜபக்‌ஷ நடந்துகொண்ட விதத்தினை பார்த்து 'எனக்கு இப்படி ஒரு தம்பி இல்லையே' என ஏக்கமாக இருக்கிறது என  தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

பிறப்பால் "அண்ணா" என கூட வந்தவர்களும் சரி, இடையில் "அண்ணா" என கூட வந்தவர்களும் சரி, என்னை பயன்படுத்தி அரங்குக்கு வந்து விட்டு என் முதுகில் அல்லவா குத்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 14ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று முன்தினம் பதவியேற்றார். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  தனது அண்ணனான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை தலை சாய்த்து வணக்கம் தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள மனோகணேசன், 'ராஜபக்ச சகோதரர் மத்தியில் முரண்பாடு. சும்மா படம் காட்டுகிறார்கள்' என்று எவரும் சொல்லலாம். ஆனால் இவ்வளவு நாள் படம் ஓட்ட முடியாது. இந்த பாசம்தான் இவர்களது வெற்றிக்கு அடிப்படை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tue, 08/11/2020 - 13:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை