மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பு மறுசீரமைப்பே எமது எதிர்பார்ப்பு

எமது நாட்டுக்கென தேசிய கொள்கையொன்று இல்லை. நாம் தேசிய கொள்கையொன்றை  உருவாக்க வேண்டும் என்பதுடன், நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு  மாற்றங்களும் செய்யப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  ஆட்சியை திறம்பட செய்யக் கூடிய நிர்வாகி என்பதை கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டுக்கு நிரூபித்துக்காட்டியுள்ளதால் பொதுத் தேர்தலில் அவருக்கு பூரண ஆதரவை மக்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும்.  அரசியல் என்பது ஒரு விளையாட்டை போன்றது. அனைத்து விளையாட்டு வீரர்களினதும் இறுதி இலக்கு நாட்டுக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்பதாகும். அணியின் தலைவர்கள் மாறுவார்கள் ஆனால், வெற்றியொன்றுதான் இலக்காக இருக்கும். 

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறந்த அரசாட்சியை செய்யக் கூடியவர் என நான் நம்புகிறேன். அதனை அவர் நிரூபித்தும் காட்டியுள்ளதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.   உலகில் பல நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்ட நிலையில் ஏனையவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து கொரோனா வைரஸை முகாமைத்துவம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய தலைமைத்துவமே காரணம். நாட்டை புதிய பரிமாணத்தில் அவர் கட்டியெழுப்புவார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. தற்போது எமது கடமையாவது அவருக்கு பூரண ஆதரவை பெற்றுக்கொடுப்பதாகும். 

எம்.சி.சி. உடன்படிக்கையில் நாட்டுக்கு பாதகமான காரணிகள் உள்ளமையால்தான் அதற்கு எதிராக ஆரம்பத்திலிருந்து நாம் குரல்கொடுத்தோம்.

இது தொடர்பிலான ஆய்வு அறிக்கையின் பிரகாரம் எமது நிலையாடு சரியென அனைவருக்கும் தெரிந்திருக்கும். யுத்தத்தில் நாட்டை மீட்டெடுத்த நாம் உடன்படிக்கையொன்றின் மூலம் நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டோம்.

எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் ஆய்வுசெய்து தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை மக்களின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

அதிகாரத்துக்கு வரும ஒவ்வொரு அரசாங்கங்களும் அரசியல், சமூக, பொருளாதார கொள்கைகளை அவர்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்கின்றனர். எமது நாட்டுக்கென தேசிய கொள்கையொன்று இல்லை என்றார். 

Sun, 08/02/2020 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை