நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவிப்பு

தத்தமது சொந்த நோக்கங்களிலிருந்து விலகி நாட்டின் தேசிய நோக்கத்தை முன்னிலைப்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணைந்து செயற்படுவது அவசியம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற் சங்கத் தலைவரும் முன்னாள் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க தொடர்புகள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கானிமி லொக்குகே தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷ நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை மற்றும் பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியமை என்பவற்றை கொண்டாடும் வகையில் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 30வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததும் கொரோனா தொற்றிலிருந்து நாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ காப்பாற்றிய சம்பவமும் இந் நாட்டில் முக்கிய இரண்டு வெற்றிகளாகும்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் எமது தொழிற்சங்கத்தை அமைக்கும் போது பாரிய அர்ப்பணிப்புகளைச் செய்தோம். 52நாட்கள் ஆட்சிக் காலத்தில் எமக்கு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. ஆனால் இன்று நாம் வலுவாக இந்த லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கமாக பல பணிகளை மேற்கொண்டுள்ளோம்.அரசாங்கம் ஒன்றை அமைக்கும் போது அரச தொழிற்சங்கங்கள் அரச கட்சியை வலுவாக்க வேண்டும். லேக்ஹவுஸ் நிறுவனம் அப்பணியை உறுதியாக நன்றாகச் செய்து வருகிறது.

அரச ஊடக நிறுவனமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது போன்று எதிர்க் கட்சியினரின் கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு செல்வது அவசியமாகும்.

அதற்காகவும் நடவடிக்கையில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகின்றது.

Tue, 08/11/2020 - 13:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை