அமெரிக்காவில் இறுதிச்சடங்கில் விழித்துக்கொண்ட இளம் பெண்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தன் வீட்டில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஓர் இளம்பெண் இறுதிச் சடங்கின்போது விழித்துக்கொண்டதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

அந்த 20வயதுப் பெண்ணின் உடலைப் பதப்படுத்துவதற்கு ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவர் கண்விழித்தார்.

உடலைப் பதப்படுத்தும் பணியில் இறங்கியவர்கள் பெண்ணின் உடலில் உள்ள இரத்தத்தை கிட்டத்தட்ட வெளியாக்கவிருந்தனர் என்று அந்த வழக்கறிஞர் கூறினார். 

டிட்ரோயிட் நகரில் தன் வீட்டில் எந்தவித அசைவுமின்றிக் காணப்பட்ட அந்தப் பெண்ணுக்கு மருத்துவ உதவியாளர்கள் 30நிமிடங்களுக்கு முதலுதவி கொடுத்தனர். 

வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட மருத்துவத் தகவல்களைக் கொண்டு அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர் அறிவித்துள்ளார். ஆனால் சுமார் 1மணிநேரத்திற்குப் பின்னரும் அந்தப் பெண் உயிருடன் இருந்துள்ளார். 

அவர் உடல் இருந்த பையைத் திறந்தபோது கண் விழித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் உடல்நிலை கவலைக்கிடமாய் இருப்பதாக டிட்ரோயிட் மருத்துவ நிலையம் தெரிவித்தது. சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது.   

Thu, 08/27/2020 - 10:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை