அச்சமின்றி வாக்களிக்க வருமாறு ஆணையாளர் மஹிந்த அழைப்பு

முகக்கவசம், ஒரு மீற்றர் இடைவெளி கட்டாயம்;

முகக்கவசம், ஒரு மீட்டர் இடைவெளியை கட்டாயம் பேணி வாக்குச் சாவடிகளில் சுகாதார வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில்,

வாக்குச் சாவடிகளில் வைரஸ் பரவலுக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. வாக்குச் சாவடிகளுக்குள் தொற்றுடன் வரவோ அல்லது வைரஸ் தொற்றுடன் வெளியேறவோ எவ்வித வாய்ப்புகளும் இல்லை.

வாக்குச் சாடவடிகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும். கைகளையும் கழுவிக்கொண்டு வரவேண்டும். வாக்குச் சாவடியில் முதலாவதாகவுள்ள அதிகாரிக்கு முகக்கசவங்களை கீழிறக்கிவாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முகத்தை காட்ட வேண்டும்.  பின்னர் மீண்டும் கைகளை கழுவ வேண்டும்.

அதன் பின்னர் கை விரலை மடித்து மை பூசிக்கொள்ள வேண்டும். ஒருமுறை மாத்திரமே மை பூசும் பேனை பயன்படுத்தப்படுத்தப்படும் என்பதால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைரஸ் பரவலுக்கு வாய்ப்பு இல்லை. அதனால் வாக்காளர்களை அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு வருமாறு கோரிக்கை விடுக்கிறேன்.முடிந்தால் கருப்பு அல்லது நீளப் பேனையை கொண்டுவாருங்கள். இல்லாவிட்டால் நாம் தொற்று நீக்கப்படும் பேனைகளை வழங்குவோம். வாக்களிப்பதற்கான ஆவணத்தை கட்டாயம் அனைவரும் கொண்டுவர வேண்டும் என்றார்.

 

Mon, 08/03/2020 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை