Header Ads

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று புதிய உச்சம்

தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதத்திற்குப் பின் நேற்று அதிக கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவானதை அடுத்து அங்கு தேசிய அளவில் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

நேற்று புதிதாக 397 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதில் 51 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் கொரியாவின் பாதி எண்ணிக்கையினர் வாழும் சோல் பிராந்தியத்திலேயே அதிகம் பேர் உள்ளனர்.

புதிய நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் பாடசாலைகள் மற்றும் வர்த்தகங்கள் உட்பட கடுமையான சமூக இடைவெளி பேணப்படும் என நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“நாம் தேசிய அளவில் நோய்த் தொற்றுக்கு முகம்பொடுத்திருப்பதால் நிலைமை மோசமானதாகவும் தீவிரமாகவும் உள்ளது” என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான கொரிய மத்திய நிலையத்தின் தலைவர் ஜுங் இயுன் கியெங் தெரிவித்துள்ளார்.

Mon, 08/24/2020 - 01:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.