துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வை ஏற்றார் கமலா ஹரிஸ்

அமெரிக்க செனட்டர் கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளருக்கான நியமனத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் முதல் கறுப்பின, ஆசிய அமெரிக்க வேட்பாளராக அவர் உள்ளார்.

நியமனத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய அவர், பொதுத் தேர்தலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை அதிகாரபூர்வமாக்கிய சட்டத்தைப் போற்றினார்.

மகளிர் உரிமைகளுக்காகப் போராடிய பெண்களை நினைவுகூர்ந்த ஹரிஸ், தம்முடைய தாயார் ஷியாமளா கோபாலன் அவர்களுள் ஒருவர் என்றார்.

கொரோனா நோய்ப் பரவல், பாதுகாப்பு அதிகாரிகளால் ஏற்பட்ட ஜோர்ஜ் புளோய்ட், பிரியானா டேலர் ஆகியோரின் மரணம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், இனப் பாகுபாட்டை முறியடிக்க வாக்காளர்கள் தங்கள் கடமையைச் செய்யவேண்டும் என்றார்.

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிராம்ப் மற்றும் அவரின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸை எதிர்த்து ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ் போட்டியிடவுள்ளனர்.

Fri, 08/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை