அப்துல் கயூமுக்கு கொரோனா தொற்று

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கயூமுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாலைதீவில் புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  

காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்தே மூன்று தசாப்தங்கள் மாலைதீவில் ஆட்சியில் இருந்த கயூம் மருத்துவ சோதனை மேற்கொண்டதாக அவரது குடும்பத்திற்கு நெருக்கமான முன்னாள் உதவியானர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.  

“எனக்கு கொவிட்–19தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது” என்று 82வயதான கயூம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். “வேகமாக குணம்பெறுவதற்கும் நல்ல உடல் நலத்திற்கும் எனக்கும் நோயுற்ற அனைவருக்கும் சர்வவல்லமை படத்த அல்லாஹ் அருள்பாலிப்பானாக” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகிய பின்னரும் அவர் அரசியல் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரை ஒரு வர்வாதிகாரி என்று அவரது எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.  

மாலைதீவில் 7,407 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.    

Thu, 08/27/2020 - 09:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை