மின்சாரத் தடை விசாரணை அறிக்கை இன்று அமைச்சரவையில்

- ஊழியரின் தவறுதலே காரணம் என தெரிவிப்பு

நாடு பூராகவும் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (26) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

09 பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கை, நேற்று முன்தினம் (24) விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டலஸ் அளகப்பெருமவிடம் கையளிக்கப்பட்டது.

மின் தடை தொடர்பில் விசாரணை செய்யவும், இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படுவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை அடையாளம் காணவும் பேராசிரியர் ராஹுல அத்தலகே தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் இருவரை தவிர ஏனைய 07 பேரும் குறித்த துறையில் நிபுணத்துவம் கொண்ட வெளிநபர்கள் என அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர் ஒருவரின் தவறுதல் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 08/26/2020 - 12:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை