நெதர்லாந்தின் பிரபல ஓவியம் மூன்றாவது முறையாக திருட்டு

நெதர்லாந்து ஓவியரான பிரான்ஸ் ஹேல்சினின் சிறிக்கும் சிறுவர்கள் என்ற பிரபல ஓவியம் அந்நாட்டின் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து மூன்றாவது முறையாக திருடுபோயுள்ளது.

1626 ஆம் ஆண்டைச் சேர்ந்த 18 மில்லியன் டொலர் பெறுமதி கொண்ட இந்தக் கலைப் படைப்பை உட்ரெச் நகருக்கு அருகில் இருக்கும் சிறிய அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் திருடப்பட்டுள்ளது. அருங்காட்சியத்தின் பின்புறமாக இருக்கும் கதவை உடைத்து இந்த ஓவியத்தை திருடிக் சென்றுள்ளனர்.

மதுபான சாடி ஒன்றுடன் இரு சிறுவர்கள் இருப்பது பொன்ற இந்த ஓவியமான இதே அருங்காட்சியகத்தில் இருந்து 2011 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளிலும் திருடப்பட்டு முறையே ஆறு மாதங்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மூடப்பட்டிருக்கும் நிலையில் நெதர்லாந்து அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து ஓவியம் ஒன்று திருடப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் சிங்கர் லாரன் அருங்காட்சியகத்தில் இருந்து வான் கொப்பின் கலைப்படைப்பு ஒன்று களவாடப்பட்டிருந்தது.

Sat, 08/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை