மதநிந்தனைக் குற்றச்சாட்டில் பாடகருக்கு மரண தண்டனை

நைஜீரியாவின் வட மாநிலமான கானோவில் முஹமது நபியை அவமதித்ததாக குற்றங்காணப்பட்ட பாடகர் ஒருவருக்கு தூக்குத் தண்டை விதிக்கப்பட்டுள்ளது.  

22 வயதான யஹ்யா ஷரீப் அமினு என்ற அந்தப் பாடகர் கடந்த மார்ச் மாதம் வட்ஸ்அப் ஊடாக வெளியான பாடல் ஒன்றில் மத நிந்தனையில் ஈடுபட்டிருப்பதாக உயர் ஷரீயா நீதிமன்றம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.  

ஷரீப் அமினு தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை. எனினும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவரால் மேன்முறையீடு செய்யலாம் என்று நீதிபதி காதி அலியு முஹமது கானி தெரிவித்துள்ளார்.  

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நைஜீரிய வடக்கு மாநிலங்களில் மதச்சார்பற்ற சட்டத்துடன் முஸ்லிம்களுக்கு மாத்திரமான ஷரீயா சட்டமும் அமுலில் உள்ளது.  

1999 ஆம் ஆண்டு மரண தண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஷரீயா நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஒரு மரண தண்டனையே இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளது.  

இந்த பாடகரின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இஸ்லாமிய பொலிஸ் தலைமையத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.    

Wed, 08/12/2020 - 11:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை