ஹிஸ்புல்லா நிலையின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

இஸ்ரேல் துருப்புகள் மீது எல்லை தாண்டி சூடு நடத்தியதை அடுத்து லெபனானில் ஹிஸ்புல்லா கண்காணிப்பு நிலை ஒன்றின் மீது வான் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது.  

இரு நாடுகளுக்கும் இடையிலான ஐ.நா நிர்ணயித்த எல்லைக்கு அருகில் பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவம் ஏற்பட்டதாகவும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டது.  

“கடந்த இரவில் வடக்கு இஸ்ரேலில் சோதனை நடவடிக்கையில் இருந்தபோது லெபனானில் இருந்து (இஸ்ரேல்) துருப்புகளை நோக்கி சூடு நடத்தப்பட்டது” என்று இஸ்ரேல் இராணுவம் ட்விட்டரில் குறிப்பிட்டது. “இதற்கு பதிலடியாக நாம் சூடு நடத்தியதோடு எமது விமானங்கள் எல்லைக்கு அருகில் உள்ள ஹிஸ்புல்லா கண்காணிப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. இது ஒரு மோசமான நிகழ்வு என்பதோடு எமது எல்லைகளுக்கு ஏற்படும் எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் எதிராக போராட நாம் தயாராக உள்ளோம்” என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

Thu, 08/27/2020 - 10:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை