தேசியப் பட்டியல் கிடைக்காமை ஒரு பலவீனமல்ல

சஜித் பிரேமதாசவை இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் செயலுக்கு துணைபோக முடியாதென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தைப் பெறுவது மட்டும் தமது இறுதி இலக்கல்லவெனவும், அதனைப் பெறாதது தமது பலவீனம் அல்லவெனவும் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதனைப்பெறாமை தமது இயலாமையும் அல்லவென தெரிவித்துள்ள மனோ கணேசன், இது தொடர்பாக தாம் எடுத்த முடிவு வரலாற்று சிறப்புமிக்கதெனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில் அனைத்து இனங்களையும் அணைத்துச் செல்லும் ஒரே சிங்களத் தலைவராக இருக்கும் சஜித் பிரமதாசவை சிங்கள மக்கள் மத்தியில் இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாக பலவீனமானவராகக் காட்ட முயலும் சதி முயற்சிகளுக்கு ஒருபோதும் துணை போக முடியாது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள், சஜித் பிரேமதாசவை சுவரில் சாய்த்து, பயமுறுத்தி காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கம், வடக்கு, கிழக்கில் தமிழ் கட்சிகளை மிகவும் பலவீனமடையச் செய்துள்ளதுடன், அங்கு ஊடுருவியுள்ளதாகவும் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 08/16/2020 - 07:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை