கிரைஸ்ட்சேர்ச் ஆயுததாரிக்கு பரோலில் வராத வகையில் ஆயுள் தண்டனை

கிரைஸ்ட்சேர்ச் ஆயுததாரிக்கு பரோலில் வராத வகையில் ஆயுள் தண்டனை

- இதுவரை அந்நாட்டில் இவ்வாறு விதிக்கப்பட்ட முதலாவது தீர்ப்பு

கடந்த 2019ஆம் ஆண்டு நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச்சிலுள்ள 02  பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபருக்கு கடூழிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் பிணையிலோ நன்னடத்தை காரணமாக பரோலில் (Parole) வெளி வர முடியாத வகையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது அந்நாட்டில் விதிக்கப்பட்ட இவ்வாறான முதலாவது தீர்ப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 40 பேர் காயமடைந்திருந்தனர்.

29 வயதான அவுஸ்திரேலியரான பிரண்டன் டரன்ட் (Brenton Tarrant) எனும் குறித்த குற்றவாளி, 51 கொலை குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு பயங்கரவாத செயலைச் செய்தமை தொடர்பில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தது. நியூசிலாந்தின் தெற்கு நகரில் இடம்பெற்ற குறித்த அசம்பாவிதம், பேஸ் புக் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 08/27/2020 - 10:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை