கனடாவுக்கு கொலை கும்பலை அனுப்பியதாக சவூதி முடிக்குரிய இளவரசர் மீது குற்றச்சாட்டு

சவூதி அரேபியாவின் முன்னாள் உளவு அதிகாரியை கொல்வதற்கு கனடாவுக்கு கொலை கும்பலை அனுப்பியதாக சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

துருக்கியில் ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இடம்பெற்ற சாத் அல் ஜபரி என்ற அந்த உளவு அதிகாரியை கொல்லும் முயற்சி தோல்வி அடைந்திருப்பதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில் தெரியவந்துள்ளது.

சவூதி அரசின் முன்னாள் அதிகாரியான ஜபரி மூன்று ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அது தொடக்கம் அவர் டொரொன்டோவில் தனியார் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நுழைய முயன்ற கொலைக் கும்பல் பற்றி அமெரிக்க எல்லைக் காவல் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்த நிலையிலேயே குற்றம்சாட்டப்படும் இந்தக் கொலை முயற்சி தோல்வியடைந்துள்ளது.

61 வயதான ஜபரி சவூதி அரேபியாவில் பிரிட்டனின் எம்16 மற்றும் ஏனைய மேற்குலக உளவு நிறுவனங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக முக்கிய தகவல் பரிமாற்றுபவராக செயற்பட்டு வந்துள்ளார்.

வொசிங்கடன் டி.சி. இல் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒப்புதல் அளிக்கப்படாத 106 பக்க முறைப்பாட்டில், ஜபரியை மௌனிக்கச் செய்வதற்கு அவரை கொல்ல முடிக்குரிய இளவரசர் முயற்சித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மோசமான ஆவணங்கள் தமக்குக் கீழ் இருந்ததே இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம் என்று ஜபரி குறிப்பிட்டுள்ளார். இதில் ஊழல் விவகாரங்கள் மற்றும் புலிப் படையணி என்று அழைக்கப்படும் தனிப்பட்ட கூலிப்படையின் மேற்பார்வை குழு ஒன்று தொடர்பான ஆவணங்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புலிப் படையணியின் உறுப்பினர்களே சவூதியை விட்டு வெளியேறி இருந்த ஊடகவியலாளர் கசோக்கியின் கொலையுடன் தொடர்புபட்டவர்களாவர். 2018 ஆம் ஆண்டு ஸ்தான்பூலில் இருக்கும் சவூதி துணைத் தூதரகத்தில் வைத்தே கசோக்கி கொல்லப்பட்டார்.

 

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை