எமது மக்கள் சக்தி தேசிய பட்டியல் இழுபறி தொடர்கிறது

எமது மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி தொடர்பில் கட்சிக்குள் பாரிய இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தேசியப் பட்டியல் எம்.பியாக பொதுபல சேனா தலைவர் ஞானசார தேரரும் முன்னாள் எம்.பி ரதன தேரரும் பிரயத்தனம் எடுத்து வரும் நிலையில் கட்சி செயலாளர் வெதிகம விமலரத்ன தேரர் தமது பெயரை தேசியப்பட்டியல் எம்.பியாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதால் நெருக்கடி நிலை மேலும் சிக்கலடைந்துள்ளதாக அறிய வருகிறது. 

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஞானசார தேரரும் அதுரலியே ரதன தேரரும் இணைந்து இந்த கட்சியை ஆரம்பித்தார்கள். எமது மக்கள் சக்தி சார்பில் கொழும்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதோடு கம்பஹா மாவட்டத்தில் ரதன தேரர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

இந்த நிலையில் இந்த கட்சிக்கு தேசியப் பட்டியல் எம்.பி பதவி ஒன்று கிடைத்துள்ளதோடு இதனை யாரை நியமிப்பது என கட்சிக்குள் இழுபறி நிலை உருவாகியுள்ளது. ஞானசார தேரரை நியமிக்க வேண்டும் என ஒருதரப்பும் அதுரலியே ரதன தேரரை நியமிக்க வேண்டும் என மற்றொரு தரப்பும் கோரி வருகின்றனர்.இந்த நிலையில் கட்சி செயலாளர் வெதிகம விமலரத்ன தேரர் தானே தேசியப் பட்டியல் எம்.பி என தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.ஆனால் இது கட்சி செயற்குழு எடுத்த முடிவல்ல எனவும் அதனை ஏற்க கூடாது எனவும் கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அறிய வருகிறது. 

இந்த நிலையில் யார் தேசியப்பட்டியில் எம்.பி என அறிவிப்பது இன்னும் காலதாமதமாகாலாம் என அறிய வருகிறது.(பா)

Mon, 08/10/2020 - 10:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை