புலம்பெயர் நாடுகளுக்கு நிகரான வாழ்வு தாயகத்தில்

அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம் 

வாழ்க்கை செலவுக்கேற்ற ஊதியம், ஊதியத்திற்கேற்ற வாழ்கைத் தரம், என்ற நிலையை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதே தன்னுடைய எதிர்பார்ப்பென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

மானிப்பாயில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,  எமது மக்கள் மத்தியில் காணப்படுகின்ற வருவாய் ஏற்றத் தாழ்வுகளை நீக்கி புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் அனுபவிப்பதைப் போன்ற வளமான வாழ்கையை ஏற்படுத்துவதே தன்னுடைய எதிர்பார்ப்பென்று அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், புலம்பெயர் தேசங்களின் தரத்திலான வாழ்கையினை உருவாக்கப்படுகின்ற பட்சத்தில், எமது மக்கள் மத்தியில் தற்போது காணப்படுகின்ற புலம்பெயர் நாடுகள் நோக்கி பயணிக்கும் ஆர்வம் குறையும் எனவும் அதனூடாக எமது தேசத்தின் இனப் பரம்பல் ஸ்திரமாக பேணப்பட்டு போதுமான அதிகார பலத்தை தக்க வைக்கக் கூடிய நிலையை உறுதிப்படுத்துவதும் தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

Sun, 08/02/2020 - 13:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை