உணவில் வைரஸ் பரவல்: சுகாதார அமைப்பு மறுப்பு

உணவுப் பொட்டலங்களில் காணப்படும் கொரோனா வைரஸ் உணவில் பரவாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதுகுறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அது குறிப்பிட்டது.

சீனாவின் இரண்டு நகரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட உறையவைக்கப்பட்ட உணவின் பொட்டலங்களில் கொரோனா வைரஸ் இருந்தது அடையாளம் காணப்பட்டது. அதன் காரணமாக வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைப் பிரிவு தலைவர் மைக் ரயா, உணவு மூலமாகவும் உணவு பொட்டலங்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதற்கான சான்று எதுவும் இல்லை என்றார்.

சீனாவில் உள்ள ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்கள் பரிசோதிக்கப்பட்டதையும் அவற்றில் ஒருசில பொட்டலங்களில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.

Sat, 08/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை