கடும் பாதுகாப்புடன் கொழும்பு வந்தடைந்த பிள்ளையான்

இன்று பாராளுமன்றம் செல்ல அனுமதி

நீதிமன்ற அனுமதியுடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து நேற்று சிவனேசதுரை சந்திரகாந்தன் எம்.பி (பிள்ளையான்)  சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான  இவர் சிறைச்சாலையில் இருந்த வண்ணமே நடந்து முடிந்த  பாராளுமன்றத் தேர்தலில் அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளைப் பெற்று  பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று  நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்ட நகர்வுப் பிரேரணைக்கான கோரிக்கைகள் நீதிமன்றில் ஏற்கப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார். இதனடிப்படையில் இன்று பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ளுவதற்காக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

Thu, 08/20/2020 - 09:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை