மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் இரு திரை கைபேசிகள் அறிமுகம்

இரு திரைகளைக் கொண்ட கைபேசியை மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

‘செர்பேஸ் டூ’ எனப்படும் கைபேசிகள் ஆன்ட்ரொயிட் செயல்பாட்டுக் கட்டமைப்பில் இயங்கும். அடுத்த மாதம் 10ஆம் திகதியிலிருந்து விற்பனைக்கு வரும் இந்த கைபேசியின் விலை 1,399 அமெரிக்க டொலர்களாகும்.

மடக்கக்கூடிய செர்பேஸ் டூ கைபேசிகள், சாம்சுங்கின் கெலக்சி சி போல்ட் 2 கைபேசிகளின் மடக்கும் கண்ணாடித் திரைகளைப் போலல்லாது இரு திரைகளை ஒன்றாக இணைத்துப் பயன்படுத்தும் வகையில் அமையும்.

வேலைகளை இலகுவாக கைபேசி வழியே செய்யலாம் என விளம்பரம் செய்யப்படுகிறது. ஒரே நேரத்தில் இணையச் சந்திப்புகள், மின்னஞ்சல் அனுப்புவது போன்றவற்றைச் செய்ய உதவுகிறது.

அமெரிக்காவில் மட்டுமே தற்போது வெளியிடப்படும் இந்த கைபேசி மற்ற நாடுகளுக்கு எப்போது வரும் என்பது தெரியவில்லை. செர்பேஸ் டூ கைபேசிகளில் 5ஜி இணையக் கட்டமைப்பு இல்லை.

Sat, 08/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை