இரத்ததான நிகழ்வு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகம் மற்றும் அல்- நஜா சமூகசேவை அமைப்பு இணைந்து நடாத்திய மாபெரும் இரத்தான நிகழ்வு நேற்று (23.08.2020) கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தலைமையில் அல் -நாஜா விளையாட்டுக் கழகத்தின் அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் எஸ்.எம்.முனாஸ்தீன்,முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

Mon, 08/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை