குளியல் பற்றி டிரம்ப் முறைப்பாடு: சட்டத்தை மாற்றியமைக்க திட்டம்

‘ஷவர் ஹெட்’ குழாயில் இருந்து நீர் கொட்டும் அளவு பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் முறைப்பாடு செய்ததை அடுத்து அது தொடர்பான கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு அமெரிக்க நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்காவில் ஷவர் ஹெட் தொடர்பான 1992 சட்டம் ஒன்றின் அடிப்படையில் அதன் மூலம் நிமிடத்திற்கு 2.5 கலென்களுக்கு மேல் பெறுவதற்கு தடை உள்ளது.

இதனை ஒவ்வொரு முனைகளுக்குமாக மாற்றி அமைப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது.

எனினும் இது அநாவசியமான மற்றும் தேவையற்ற நீர் விரயத்தை ஏற்படுத்தும் என்று நுகர்வோர் மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் குறிப்பிடுகின்றன.

இது பற்றி வெள்ளை மாளிகை கடந்த மாதம் முறையிட்டதை அடுத்து வலுசக்தி திணைக்களம் கடந்த புதன்கிழமை இந்த பரிந்துரையை செய்தது. “குளிக்கும்போது ஷவர் ஹெட்டில் இருந்து தண்ணீர் வருவதில்லை. தலையை கழுவுவதற்கு தண்ணீர் வெளியே வருவதில்லை. என்ன செய்வது? அங்கு நீண்ட நேரம் நிற்க வேண்டுமா அல்லது நீண்ட நேரம் குளிக்க வேண்டுமா? ஏனென்றால் எனது தலை முடி அப்படியானது. உங்களை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அது சரியானதாக இருக்க வேண்டும்” என்று டிரம்ப் குறைகூறியிருந்தார்.

Fri, 08/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை