நான்கரை வருட காலம் நாட்டில் இருண்ட யுகம்

திறமையான குழுவை பாராளுமன்றம் அனுப்புங்கள் -- பிரதமர்

நல்லாட்சியின் நான்கரை வருடங்கள் நாட்டின் இருண்ட யுகமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளங்களைப் பாதுகாத்து கட்டியெழுப்பக்கூடிய நம்பிக்கையான குழுவினரை பாராளுமன்றத்திற்கு இம்முறை தெரிவு செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஹம்பாந்தோட்டை பீச் பார்க்கில் நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் இறுதிநாள் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

நாம் எமது ஆட்சிக் காலத்தின் போது இந்த மாவட்டத்தில் துறைமுகம், விமான நிலையம், சர்வதேச விளையாட்டரங்கு மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் போன்றவற்றை நிர்மாணித்தது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியே ஆகும். அவர்களுக்கே இவை அனைத்தும் சொந்தமாகும்.எதிர்காலத்தில் எமது நாட்டில் பிறக்க போகும் குழந்தைகளுக்கு சொந்தமான சொத்துக்களை ஐந்து வருடங்களுக்கு ஆட்சியேற்கும் அரசாங்கத்திற்கு ஒரு போதும் விற்பனை எந்த உரிமையுமில்லை. என்பதினை நான் உங்களுக்கு மிகவும் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்.அவ்வாறு செய்வதை தேசத்துரோகமாகவே கருதுகிறேன்.

2005 எமது ஆட்சியில் யுத்தத்தை நிறைவு செய்து அபிவிருத்தியை ஆரம்பித்தோம். அதன் பிரதிபலனையே தற்பொழுது அனுபவிக்கிறீர்கள். இவை உங்களுக்கே சொந்தமானது. இங்கிருந்த சஜித் பிரேமதாச இவற்றை விற்பனை செய்வதை ஆமோத்தித்து விட்டு உங்களை கைவிட்டு கொழும்பிற்கு சென்றுள்ளார். இம்முறை தேர்தலில் ஜனாதிபதியை பலப்படுத்தக் கூடிய வெற்றியை வழங்க வேண்டும். நான் எங்கு போட்டியிட்டாலும் உங்களுடனேயே இருக்கிறேன்.

 

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

Mon, 08/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை