வன்டேஜ் உதைபந்தாட்ட தலைவர் கிண்ணம்: அரையிறுதியில் ஜாவா லேன், நியூ ஸ்டார் அணிகள்

வன்டேஜ் உதைபந்தாட்ட தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் முதலிரு காலிறுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஜாவா லேன் மற்றும் நியூ ஸ்டார் விளையாட்டு கழக அணிகள் தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளன. 

சுகததாச அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு மின்னொளியின் கீழ் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் 30நிமிடங்கள் கடந்த நிலையில், நியூ ஸ்டார் அணிக்காக இந்த தொடரில் அதிக கோல்களைப் பெற்றுள்ள மொஹமட் அனஸ் போட்டியின் முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

முதல் பாதியில் புளூ ஈகல்ஸ் பெற்ற சிறந்த வாய்ப்பாக, பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து ஜீவன்த பெர்னாண்டோ உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. இதனால் நியூ ஸ்டார் அணி முதல் பாதியில் முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10நிமிடங்களுக்குள், மைதானத்தின் ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை கோல் எல்லையில் இருந்து பெற்ற அனஸ் தனது அடுத்த கோலையும் பதிவு செய்தார்.

 அடுத்த 6 நிமிடங்களுக்குள் புளூ ஈகல்ஸ் வீரர் துமிந்த தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

போட்டியின் இறுதி நிமிடங்களில் புளூ ஈகல்ஸ் வீரர்கள் மேற்கொண்ட தமது இரண்டாம் கோலுக்கான முயற்சிகளை நியூ ஸ்டார் பின்கள வீரர்கள் லாவகமாகத் தடுத்தனர். அதேபோன்று, புளூ ஈகல்ஸ் அணியின் அனுபவ வீரர் நெத்ம மல்ஷான் எதிரணியின் கோலுக்கு அருகில் கிடைத்த சிறந்த வாய்ப்பையும் தவறவிட போட்டி நிறைவில் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 2 – 1என வெற்றி பெற்று, தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியது.

உதைபந்தாட்ட தலைவர் கிண்ணத்தில் கொவிட்-19விதி மீறல்கள்

மீண்டும் எதிரணியின் கோலுக்கு அண்மையில் பந்தை பெற்ற ஜாவா லேன் வீரர் அப்துல்லா, அதனை கோல் நோக்கி செலுத்தினார். கோலுக்காக சென்றுகொண்டிருந்த பந்தை டிபென்டர்ஸ் வீரர் கோல் எல்லையில் இருந்து வெளியேற்றினார். 

தொடர்ந்து, டிபென்டர்ஸ் வீரர்களுக்கு முதல் பாதியில் கிடைத்த ஒரே வாய்ப்பாக சஜித் குமார முன் களத்தின் இடது புறத்தில் இருந்து உயர்த்தி உதைத்த பந்து கோலின் மேல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. இதனால் முதல் பாதி கோலின்றி நிறைவுற்றது.  இரண்டாம் பாதியின் ஆரம்பம் முதல் ஜாவா லேன் வீரர்களது வேகம் முதல் பாதியைவிட அதிகமாக இருந்தது. எனினும், அனுபவ வீரர்களான மாலக பெரேரா, அப்துல்லா, நவீன் ஜூட் மூவரும் அடுத்தடுத்து வாய்ப்புக்களை வீணாக்க, போட்டி முழு நேர முடிவில் இரு அணிகளாலும் எந்த கோலையும் பெற முடியாமல் போனது. 

வெற்றியாளரை தேர்வு செய்வதற்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது, ஜாவா லேன் கோல் காப்பாளர் அஷ்பாக் அயூப் 2 பந்துகளை சிறந்த முறையில் தடுக்க, டிபென்டர்ஸ் வீரர்கள் ஒரு கோலை மட்டுமே பெற்றனர். மறுமுனையில், ஜாவா லேன் வீரர்கள் 3 கோல்களை பெற்று ஆட்டத்தை வென்று, வன்டேஜ் FFSL தலைவர் கிண்ணம் 2020 இன் அரையிறுதியிக்கு முதல் அணியாக தெரிவாகியது.

Tue, 08/25/2020 - 09:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை