காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டு தாக்குதல் மற்றும் தீயை பரவச் செய்யும் பலூன்களை அனுப்பியதற்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் நேற்றும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் கடந்த சனிக்கிழமை மாலை மோதல்கள் வெடித்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

“டஜன் கணக்கான பலஸ்தீன கலகக்காரர்கள் பாதுகாப்பு வேலியை நோக்கி டயர்களை எரித்தும், வெடிபொருட்கள் மற்றும் கைக்குண்டுகளை வீசியதோடு எல்லை வேலியை அணுக முயன்றனர்” என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இராணுவ வளாகம் ஒன்று மற்றும் நிலத்தடி கட்டுமானங்கள் இதன்போது இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி நேற்றுக் காலை வீசப்பட்ட இரு ரொக்கெட் குண்டுகள் இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை