பூமிக்கு மிக அருகில் வந்த சிறிய விண்கல்

இதுவரை அவதானிக்கப்பட்டதில் பூமிக்கு மிக நெருக்கமாக 1,830மைல்கள் தொலைவில் கார் வண்டியின் அளவான விண்கல் ஒன்று கடந்து சென்றதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா குறிப்பிட்டுள்ளது.  

எனினும் 2020கியு.ஜி. என்ற பெயர் கொண்ட இந்த விண்கல் பூமியுடன் மோதினாலும் அது வளி மண்டத்திலேயே அழிந்து எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.  

10தொடக்கம் 20அடி நீண்ட இந்த விண்கல் தென்னிந்திய கடலுக்கு மேலால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூமியை நெருங்கி வந்துள்ளது. அது வினாடிக்கு எட்டு மைல் வேகத்தில் பயணித்துள்ளது.  

பூமிக்கு அருகே வரும் விண்கற்களின் வரலாற்றில் இது ஒரு சாதனை என தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள், 45 டிகிரி அளவுக்கு சாய்வாக இந்த விண்கல் வந்ததால் அது பூமியின் வளிமண்டலம் மற்றும் புவியீர்ப்பு சக்தியால் எரிந்து விடாமல் கெமராவில் பதிவானதாக கூறியுள்ளனர்.   

Thu, 08/20/2020 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை