சலாமிய விளையாட்டுக் கழகம் சம்பியன்

புல்மோட்டை சலாமியா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்ந கேகேஎல் சம்பியன் கிண்ணம் சீசன் -01

தொடரின் இறுதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் கலந்து கொண்டு இறுதி போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட சலாமிய அணிக்கு வெற்றிக்கிண்ணத்தினையும் பணப்பரிசிலையும் வழங்கி வைத்தார்.

இச்சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற டிஎஸ் லெவன் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது.அதற்கான வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பணப்பரிசும் தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

கந்தளாய் தினகரன் நிருபர்

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை