Header Ads

காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: போர் எச்சரிக்கை

தெற்கு இஸ்ரேல் மீது பலஸ்தீனர்கள் ரொக்ெகட் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஹமாஸ் ஆட்சியில் உள்ள காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மீண்டும் குண்டு வீசியுள்ளன.  

எல்லையில் இருந்து இஸ்ரேலை நோக்கி தீ பரவச் செய்யும் பலூன்களை பறக்கவிடுவதை நிறுத்தத் தவறினால் ‘போர்’ அச்சுறுத்தல் ஒன்று பற்றி ஹாமாஸ் மீது இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.  

காசாவில் இருந்து கடந்த ஒரு வாரமாக இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல் மற்றும் தீப்பந்தம் கட்டப்பட்ட பலூன்கள் பறக்கவிடுவது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதனை தணிப்பதற்கு எகிப்து பாதுகாப்பு அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.  

இதன்போது ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் காசாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி உடன் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.  

2008 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மூன்று போர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Thu, 08/20/2020 - 11:39


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.