மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு மறுசீராக்கம்

19 நீக்கும் 20 ஆவது திருத்தத்தை சமர்ப்பிக்கவும் ஏற்பாடு

 

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நீக்குவதற்காக புதிய 20ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.   

20ஆவது திருத்தச்சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்குத் தேவையான திட்டமிடல்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இத் திருத்தச் சட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்வதற்கான செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.  

19ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள நாட்டுக்குப் பாதகமான அனைத்து சரத்துகளும் நீக்கப்படவுள்ளதுடன், நாட்டின் சுயாதீனத்தை வலுப்படுத்தும் வகையிலான சரத்துகளும் இணைக்கப்படவுள்ளன. 20ஆவது திருத்தச்சட்டத்தை குறுகிய காலத்துக்குள் நடைமுறைக்கு கொண்டுவருவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது.  

20ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் 5ஆண்டுகளுக்குள் மட்டுப்படுத்துவது தொடர்பிலான குறைப்பாடுகளை நிவர்த்தி செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்கள் இயங்குவதிலுள்ள சிக்கல் நிலைகளை தகர்த்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து அரசாங்கம் ஆழமாக அவதானம் செலுத்தியுள்ளது.  

19ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக மறுசீரமைப்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் புதிய அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக் ஷ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Sun, 08/16/2020 - 07:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை