புகழ் பூத்த ஓவியர் ஆசை இராசையா காலமானார்

ஈழத்தின் மதிப்புக்குரிய மூத்த ஓவியர் ஆசை இராசையா (வயது 74) நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தெல்லிப்பழை மருத்துவமனையில் காலமானார்.  ஈழத்து ஓவிய உலகின் அடையாளங்களுள் ஒருவரான அவர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார். ஆசை என அழைக்கப்படும் இவர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் விளங்கியவர். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவர்.

இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார். அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர் ஆசை இராசையா யாழ். பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவரது படைப்புக்களில் வெளிக்காட்டப்படும் உருவங்கள் யாழ். மண் சார்ந்ததாகவே இருக்கின்றன.இவரது முதலாவது தனிநபர் ஓவியக் கண்காட்சி 1985 இல் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

 

Mon, 08/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை