புதிய சபாநாயகருக்கு தமிழ் எம்.பிக்கள் பலரும் வாழ்த்து

இரு தரப்பிற்கும் செவிமடுத்து பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்களை பேணி செயற்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்  இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

புதிய சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மேலும் குறிப்பிட்டதாவது,

த.தே.கூ சார்பில் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.உங்கள் தெரிவிற்கு எமது பாராட்டுக்கள்.இரு தரப்பிற்கும் செவிமடுத்து பாராளுமன்ற சம்பிரதாயங்களை பேணி செயற்பட எமது தரப்பு உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி,

உங்கள் பாராளுமன்ற வரலாறு வர்ணமயமானது.பல அமைச்சு பதவிகள் வகித்துள்ளீர்கள்.மனசாட்சிக்கு பயந்து செயற்படக் கூடியவர் நீங்கள்.உங்கள் கட்சி மனசாட்சிக்கு முரணாக செயற்பட்ட போது அதற்கு எதிராக வாக்களித்துள்ளீர்கள்.பல்இன, மத, மொழி பேசும் நாட்டில் அதன் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

புளொட் கட்சி தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி,,

எதிரணி சிறிதாக இருந்தாலும் இரு தரப்பையும் சமமாக மதித்து நடுநிலையாக செயற்பட வேண்டும். தேசியப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் வாயிலாக நியாயமான தீர்வு காண வேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பேசும்,...

பக்கச் சார்பின்றி சபையின் கௌரவத்தை மதிக்கும் வகையில் புதிய சபாநாயகர் செயற்பட வேண்டும்.மக்கள் ஆணை மதிக்கப்பட வேண்டும்.அதற்கு உரிய இடம் வழங்க வேண்டும் என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Fri, 08/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை