ஐ.தே.க.தலைவராக வருவதற்கு சட்ட சிக்கலா?

கரு ஜெயசூரிய மறுப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தான் தெரிவுசெய்யப்படுவதற்கு எதிராக சட்டச் சிக்கலொன்று இருப்பதாக கூறப்படுவதை முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய மறுத்திருக்கிறார். தான் ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு அங்கத்தவர் அல்ல என்று கூறப்படுகிறது. ஆனால் தான் கட்சியின் ஆயுட்கால அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகிறார். முன்னாள் சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியை

ஏற்றுக்கொள்ள இருப்பதாகவும் அதற்கான அவரது தகுதி தொடர்பாக பல்வேறு பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும் முன்னாள் சபாநாயகரின் ஊடகப் பிரிவு கூறுயுள்ளது.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பின் படி அவர் கட்சியின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்படுவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லையென்று சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். அத்துடன் சபாநாயகராகவும் அரசியல் பேரவையின் தலைவராகவும் இருந்தபோது அவர் அரசியல் கட்சிகளில் எந்தவொரு பதவியிலும் இருக்கக்கூடாது என்ற கொள்கையை கரு ஜெயசூரிய பின்பற்றியிருந்தார்.

அரசியலமைப்பு பேரவையின் தலைவராக அவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கரு ஜெயசூரியவும் 20வருடங்களுக்கு முன்னரே ஐக்கிய தேசிய கட்சியின் ஆயுட்கால அங்கத்துவத்தை பெற்றுள்ளனர்.

அத்துடன் அரசியலமைப்பு பேரவையின் தலைவர் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி கரு ஜெயசூரிய கட்சியின் தீவிர அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்ததுடன் 2020 ஆம் ஆண்டுக்கான கட்சியின் அங்கத்துவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Thu, 08/27/2020 - 08:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை