வரலாற்றில் முதற் தடவையாக சுதந்திர கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்

அதனை மக்களுக்கு சரியாக பயன்படுத்துவேன்

எமது மக்களின் அனைத்து தேவைகளையும் இந்த அரசாங்கத்தினூடாக பெற்றுக் கொடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்பும் தன்னையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் போன்றவர்களுக்கு கிடைத்துள்ள ஆதரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த ஆதரவிற்கு சமமானது என்றும் அவர் கூறினார்.

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்ற வார்த்தையூடாக மாத்திரம் தீர்க்க முடியாது. 05 வருடம் செய்யும் சேவையினூடாக எனது நன்றியை காண்பிப்பேன்.எமது வெற்றி பாரிய சாதனையாக குறிப்பிடப்படுகிறது.

வரலாற்றில் முதன்முறையாக சுதந்திரக் கட்சிக்கு யாழில் ஆசனமொன்று கிடைத்துள்ளது. 49 ஆயிரம் வாக்குகள் வழங்கப்பட்டன.யாழில் கூடுதல் விருப்பு வாக்குகள் எனக்கு வழங்கப்பட்டது.உடுப்பிட்டியில் எமது கட்சி வெற்றிபெற்றது.இந்த ஆணைக்கு செவிசாய்த்து மதிப்பளித்து ஜனாதிபதியும் பிரதமரும் பசில் ராஜபக்ஷவும் எனக்கு முக்கிய இருபதவிகள் வழங்கியுள்ளனர்.உரிமைக்காக குழுக்களின் பிரதித் தலைவர் பதவியும் அபிவிருத்திக்காக அபிவிருத்தி குழுத்தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சு.க தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.என் கனவு யாழ். என்ற எமது கொள்கை பிரகடனத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நீண்ட காலமாக இழந்த தகுதிகளை மீள பெற்றுத் தருமாறு அதிகூடிய மக்கள் எம்மை கோரியுள்ளனர். உயிர்களை, உடைமைகளை இழந்துள்ளோம்.இந்த அரசின் ஊடாக வீடு,தண்ணீர்.விவசாயம், கடற்றொழில் என அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற மக்கள் ஆணை தந்துள்ளனர்.உரிமைக்காக எனக்கும் ஆணை கிடைத்துள்ளது.இதற்கான தீர்வு ஒன்றல்ல.

அதற்கு பல தீர்வுகள் உள்ளன.பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான தீர்வும் முக்கியமானது.பொருளாதார தீர்வு போன்றே மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்​, சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 08/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை