நீதி அமைச்சராக நியமிப்பதற்கு எதிராக சிலர் சதி செய்தார்கள்

நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

அமைச்சுப் பதவி தனக்கு கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று இடம்பெற்றதாக நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்றுத் தெரிவித்தார்.  

நீதியமைச்சராக அலி சப்ரி நேற்று நியமிக்கப்பட்டமை தொடர்பாக முன்னதாக சில தகவல்கள் கசிந்திருந்த நிலையில் இதற்கு சில தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்திருந்ததோடு இதனை தடுக்க சதி செய்ததாகவும் அறிய வருகிறது. இது பற்றி கருத்துத் தெரிவித்த அவர்,  

நான் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாதென சில சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் அந்த சதி முறியடிக்கப்பட்டு, நான் நீதி அமைச்சராக பதவியேற்றேன். சதிகளை முறியடிப்பதிலும், எனக்கு நீதி அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டுமென்பதிலும் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக நின்றனர். இதனால் சதி முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. எனது கடமையை, எமது நாட்டுக்காக உரியமுறையில் செய்வேன். எமது ஆட்சிக்கு முழு விசுவாசமாகவும், கட்சிக்கு என்னால் முடிந்த அர்ப்பணிப்புடனும் செயற்படுவேன். எனக்கு இந்த அமைச்சுப் பதவி கிடைத்தது முழு நாட்டுக்கும் கிடைத்த கௌரவமாக கருதுகிறேன் எனவும் அவர் கூறினார். 

Thu, 08/13/2020 - 10:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை