இஸ்ரேல்-சவுதி அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப் முயற்சி

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தில் சவூதி அரேபியாவும் இணையும் என ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல் வளைகுடா நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் இஸ்ரேலுடன் கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

இது குறித்து ட்ரம்ப் அளித்த பேட்டியில், இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா பங்கேற்கும் என எதிர்பார்க்கிறேன். அப்படி விரும்பினால் அதை நிறைவேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன் என்றார். எனினும் இது குறித்து சவுதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் தெரிவித்துள்ளதாவது: பாலஸ்தீன விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் வரை இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை. ட்ரம்ப் கூறினார் என்பதற்காக அமைதி ஒப்பந்தத்தில் சவூதி இணைய வேண்டிய அவசியமில்லை என்றார்.

முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையிலான இந்த அமைதி ஒப்பந்தத்தை பலஸ்தீனம், துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த நிலையில் அமைதி ஒப்பந்தத்தில் சவூதி அரேபியா இணைய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 08/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை