இந்தோனேசியாவில் எரிமலைக் குமுறல்

இந்தோனேசியாவின் சினபுங் எரிமலை மீண்டும் குமுற ஆரம்பித்துள்ளது.

சுமத்ரா தீவில் உள்ள அந்த எரிமலை கக்கிய சாம்பல், 1,000 கிலோமீற்றர் தொலைவுக்குக் காற்றில் பரவியுள்ளது. என்றாலும், அது விமானப் போக்குவரத்தைப் பாதிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

எரிமலைக் குமுறலால் யாரும் காயமடைந்ததாகவோ, பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை.

இருப்பினும் எரிமலையை விட்டு ஐந்து கிலோமீற்றர் விலகியிருக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சினபுங் எரிமலை இந்தோனேசியாவில் இருக்கும் 120க்கும் அதிகமான எரிமலைகளில் ஒன்றாகும். கடைசியாக 2016ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

எனினும் கடந்த ஒருசில ஆண்டுகளில் இந்த எரிமலையை சூழ வாழும் சுமார் 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Tue, 08/25/2020 - 08:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை