Header Ads

கிழக்கு மக்களுக்காக உயிரையும் அர்ப்பணித்து சேவை செய்ய தயார்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

 

மட்டக்களப்புக்கு மாத்திரமின்றி அம்பாறை, திருமலை மக்களுக்காக தனது உயிரை அர்ப்பணித்து 24 மணித்தியாலங்களும் சேவை செய்யத் தயாராகவுள்ளதாக இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

”கிழக்கில் மொட்டுச் சின்னத்தின் கீழ்போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரேயொரு வேட்பாளர் நான்மாத்திரமே. இது சாதாரண வெற்றி அல்ல. இவ்வெற்றியின் ஊடாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள். 

மாற்றுவழி அரசியல்பாதையூடாகத்தான் கிழக்கு மக்களின் அரசியல் இருப்பை பாதுகாக்கமுடியும் என்ற தூரநோக்கில் வெற்றிபெற்றுள்ளோம். கிழக்கில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க அமைச்சர்கள் இல்லை.  இதற்கான பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனக்கு மட்டக்களப்பு மக்கள் தந்த ஆதரவுக்கு விசுவாசமாக சேவைசெய்யவுள்ளேன். 

முக்கியமாக இரு பொறுப்புக்கள் எனது தலையில் சுமத்தப்பட்டுள்ளன.  தபால்துறை, ஊடகம். தபால்துறையைப்பொறுத்தவரை நாட்டில் 26ஆயிரம் ஊழியர்கள் வேலைசெய்கின்றார்கள். 3610 உப தபாலகங்களும், 650 பிரதான தபாலகங்களும் உள்ளதுடன் தபால் ஊழியர்களிடையே பெரும் தொழிற்சங்கமும் உள்ளது. இவர்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். 

ஊடகத்துறையைச்சேர்ந்தவர்களும் அர்ப்பணிப்புடன் சேவைசெய்கின்றனர். ஊடகவியலாளர்களை மாவட்ட, மாகாண தேசியரீதியாக சந்தித்து கலந்துரையாடி அவர்களின் தேவைகளை நிறைவேற்றவுள்ளேன் என்றார்.    

பி.ரீ.ஏ.லத்தீப்

Tue, 08/18/2020 - 05:38


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.