கோலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன்

- ஆரோன் பிஞ்ச்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்று அவுஸ்திரேலிய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய ஒரு நாள் போட்டி அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச் நேற்றுமுன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூர் அணியுடன் எப்போது இணைவேன் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். உலகின் மிகச்சிறந்த வீரர்கள் சிலர் அந்த அணியில் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் உள்ளூர் இரசிகர்களின் முன் ஆடியிருந்தால் வியப்புக்குரிய அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டாலும் பெங்களூர் அணிக்காக ஆடுவதே என்னை பொறுத்தவரை பெரிய விஷயம் தான். முதல்முறையாக விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாட உள்ளேன். அதுவே எனக்கு பரவசமூட்டுகிறது. அவரது கேப்டன்ஷிப்பை அருகில் இருந்து கவனிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் என்றார்.

அவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் பல ஆண்டுகளாக விளையாடி இருக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் அணியை எப்படி வழிநடத்துவார், சவால் அளிப்பார் என்பதை அறிவேன். . தொடக்க வீரராக களம் இறங்கி விராட் கோலியின் நெருக்கடியை குறைக்க முடியும் என்றால், என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன்.

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை