உறுதிமொழியை மீறுவதாக சீனா மீது அமெ. அழுத்தம்

தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஏவுகணைச் சோதனை நடத்தியது அந்த பிராந்தியத்தின் அமைதியையும், பாதுகாப்பையும் அச்சுறுத்துவதாய் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

பதற்றத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என 2002ஆம் ஆண்டு சீனா கடப்பாடு தெரிவித்திருந்தது. தற்போதைய ஏவுகணைச் சோதனை அந்த உறுதிமொழியை மீறுவதாய் அமெரிக்கா கூறியது.

அந்தப் பகுதியில் இராணுவ ஆதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளும்படி சீனாவைக் கடந்த மாதம் கேட்டுக்கொண்டதாய் அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் சீனா அந்தக் கோரிக்கையைப் புறக்கணித்திருப்பதாய்க் கூறப்பட்டது. வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்வான், இந்தோனேசியா ஆகியவை சொந்தம் கொண்டாடும் தென் சீனக் கடல் பகுதியில் சீனா தனது அரசுரிமையை நிலைநாட்டி வருகிறது.கடந்த பாத்தாண்டுகளில் அந்தப் பகுதிகளில் சீனா தனது இராணுவக் கட்டமைப்பை நிறுவியுள்ளது.

 

Sat, 08/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை