டோனியின் தலைமைத்துவ அணுகுமுறை அருமையானது -முரளிதரன்

டோனியின் தலைமைத்துவ அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:-

2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இளம் வயது தலைவரான டோனி இந்திய அணிக்கு தலைமை தாங்கி கிண்ணத்தை வென்று கொடுத்தார். டோனியின் தலைமைத்துவ அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏனெனில் அவர் பந்துவீச்சாளரிடம் பந்தை கொடுத்து பந்துவீச்சாளரையே தனது பந்து வீச்சுக்கு தகுந்த மாதிரி களத்தடுப்பை அமைத்து விட்டு பந்து வீசும்படி கூறுவார். அது சரியாக அமையாவிட்டால், பவுலரிடம் அனுமதி பெற்று தானே களத்தடுப்பை உருவாக்குவார்.

பந்துவீச்சாளர் நன்றாக வீசிய பந்தை துடுப்பாட்ட வீரர் சிக்சர் அடித்தால் பந்துவீச்சாளரை கைதட்டி பாராட்டுவார். சிக்ஸ் அடித்ததற்காக கவலைப்பட வேண்டாம் நல்ல பந்தை தான் துடுப்பாட்டவீரர் தனது திறமையால் சிக்சராக அடித்து இருக்கிறார் என்று தேற்றுவார். இதுபோன்ற பாராட்டுதல்கள் எல்லோரிடம் இருந்தும் வராது.

சக வீரர் தனது தவறை திருத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும். என்பதை எல்லோருக்கு தெரியும்படியாக வெளிப்படையாக சொல்லாமல், தனியாக அழைத்து தெரிவிப்பார். அது அவருடைய வெற்றிகரமான தலைவர் செயல்பாட்டுக்கு ஒரு காரணமாகும். அமைதியாக சிந்திக்கும் திறன் கொண்ட அவர் சிரேஷ்ட வீரர்கள் கூறும் கருத்துகளை கேட்டு ஆலோசித்து முடிவு எடுப்பார். அணியை வெற்றிகரமாக நடத்தி செல்வவற்கு எந்த வீரர்கள் தனக்கு தேவை என்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார்.

Wed, 08/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை