அமெரிக்க பகிரங்க டென்னிஸ் பரிசுத்தொகை குறைப்பு

‘கிராண்ட்ஸ்லம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் எதிர்வரும் 31-ம் திகதி முதல் அடுத்த மாதம் 13-ம் திகதி வரை நியூயார்க் நகரில் ரசிகர்கள் இன்றி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான பரிசுத்தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மொத்த பரிசுத்தொகை ரூ.400 கோடியாகும். இது 2019-ம் ஆண்டை விட ரூ.28 கோடி குறைவாகும்.

இதில் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு உள்ள வீரர்களின் நிவாரண நிதிக்கு ரூ. 57 கோடி ஒதுக்கப்படுகிறது. இதனால் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையில் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை கணிசமாக சரிகிறது. மகுடம் சூடும் வீரர், வீராங்கனைக்கு பரிசுக்கோப்பையுடன் ரூ. 22 கோடி வழங்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வி அடைபவருக்கு ரூ. 11கோடி கிடைக்கும். அதே சமயம் முதல் சுற்றில் வெற்றி பெறுவோருக்கு மட்டும் 5 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு ரூ.45 இலட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை