தடுப்பு மருந்தை சோதிக்க ஒப்புதல்

கொவிட்–19 உத்தேசத் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதிப்பதற்கு சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது.

பூச்சிகளின் உயிரணுக்களில் உள்ள புரதத்தைக்கொண்டு அந்தத் தடுப்புமருந்துகளைத் தயாரிக்கவிருப்பதாகத் தென்மேற்கு நகரமான செங்டுவின் உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.

குறைந்த செலவில் தடுப்புமருந்துகளைத் தயாரிக்க சீனா முயன்று வருகிறது. சீனாவில் பூச்சிகளின் உயிரணுப் புரதத்தைப் பயன்படுத்தித் தடுப்பு மருந்துகளை தயாரிப்பது இதுவே முதல்முறை.

அது பெரிய அளவில் தடுப்புமருந்துகளைத் தயாரிக்க வகைசெய்யும் என்று செங்டு நகர அரசு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

Mon, 08/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை