திடீரென தங்கத்தின் விலை அதிகரிப்பு

தங்கத்துக்கான விலையில் திடீரென பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தங்கம் ஒரு அவுன்சின் விலை 2000அமெரிக்க டொலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றிற்கு மத்தியில் தங்க விற்பனையாளர்கள் இலாபம் பெறுவதற்கு எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறான விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தல் மற்றும் உலக பொருளாதாரத்திற்கு சேரும் பணத்தை தங்கமாக வைத்துக் கொள்வதற்கு முதலீட்டாளர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்க மற்றும் சீனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் சந்தையில் வெள்ளி விலையும் பாரிய அளவு அதிகரித்துள்ளன.

Tue, 08/11/2020 - 13:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை