திருகோணமலையில் தெரிவான உறுப்பினர்களை விடவும் கூடுதல் சேவையினை முன்னெடுப்பேன்

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் சுபியான் 

 

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நான்காவது தடவையாக புதிய பிரதமராக  பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக்சவின் பதவிப் பிரமாணத்தை கொண்டாடும் முகமாக தம்பலகாமத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.  திருகோணமலை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் எஸ்.எம்.சுபியான்  தலைமையில் அவரது இல்லத்தில் வெற்றி கொண்டாட்டம் இடம்பெற்றது. 

இதன் போது பட்டாசு கொளுத்தப்பட்டு ஆதரவாளர்களுக்கு பாற் சோறும் பகிர்ந்தளிக்கப்பட்டது.  இந் நிகழ்வில் சுபியான் உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 151ஆசனங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 

தற்போது திருகோணமலையில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் நான் பாரிய சேவைகளை முன்னெடுப்பேன். 

இந்த தேர்தலில் நிறைய பாடங்களை கற்றுள்ளோம். எமக்கு எதிரான தீய சக்திகள் செயற்பட்டன அதனை பொருட்படுத்தாது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டோம். 

கடந்த காலங்களில் பலமாக செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சி அதன் தலைமை கூட படு தோல்வியினை  அடைந்து எந்தவொரு ஆசனமும் பெறவில்லை.  3/2ஆசனத்தை பெற்று பலமான பாராளுமன்றத்தை பொதுஜன பெரமுன அமைக்கவுள்ளது. இப்படியாக மக்களுக்கான பல பாரிய அபிவிருத்திகளை திருமலை மாவட்ட மண்ணுக்கு வழங்குவோம் . எனக்கு  வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் என்றார். 

திருமலை மாவட்ட விசேட நிருபர்  

Wed, 08/12/2020 - 11:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை